கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

கோவில் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஹரிச்சக்கரமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவுப்படி விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி, வருவாய்த்துறையினர், போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டது.

அப்போது அருப்புக்கோட்டை சொக்கநாதர்கோவில் தக்கார் தேவி, விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் கோவில் நிலங்கள் தாசில்தார் கண்ணன், ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், பாஸ்கரன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆய்வாளர் முத்துமணிகண்டன், சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் சத்தியசீலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story