கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு முறிந்து விழும் நிலையில் இருந்த மரக்கிளைகள் அகற்றம்
கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு முறிந்து விழும் நிலையில் இருந்த மரக்கிளைகள் அகற்றம்
நீலகிரி
கூடலூர்
கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு மிகவும் பழமையான ராட்சத மரங்கள் நிற்கிறது. இப்பகுதிக்கு ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழமையான மரங்களின் கிளைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்த வழியாக செல்லும் மின் கம்பிகளும் மரக்கிளைகள் மீது உரசியவாறு இருந்தது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் இருந்தது. இதை தவிர்க்க தாசில்தார் சித்தராஜ் உத்தரவின் பேரில் பழமையான மரங்களின் கிளைகளை வெட்டும் பணியில் வருவாய்த் துறையினர் நேற்று ஈடுபட்டனர். இதனால் கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து ஆர்டிஓ தாலுகா அலுவலகம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து திருப்பிடப்பட்டது.
Related Tags :
Next Story