கருங்கல் அருகே சாலையை ஆக்கிரமித்த வீடு அகற்றம்


கருங்கல் அருகே சாலையை ஆக்கிரமித்த வீடு அகற்றம்
x

கருங்கல் அருகே சாலையை ஆக்கிரமித்த வீடு அகற்றப்பட்டது.

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே சாலையை ஆக்கிரமித்த வீடு அகற்றப்பட்டது.

வீடு அகற்றம்

கருங்கல் அருகே பாலூர் குளத்தங்கரை சாலையோரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி மாற்றுத்திறனாளி ஒருவர் வசித்து வந்தார். இவர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

இவரது வீடு புதுக்கடை-பரசேரி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி இடித்து அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பணி கைவிடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று குழித்துறை நெடுஞ்சாலைத்துறை கூடுதல் இயக்குனர் ஜெரால்டு ஆன்றனி தலைமையில் வீட்டை இடிக்க பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த வீட்டை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்பையும் மீறி வீட்டை இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story