சாலைகளில் மண் மேடுகள் அகற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: சாலைகளில் மண் மேடுகள் அகற்றம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) வருகிறார். இதையொட்டி மாநகரில் சாலைகளில் உள்ள மண் மேடுகள், புழுதி, சுவரொட்டிகள் அகற்ற மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாநகர நல அலுவலர் (பொறுப்பு) ஆனி குயின் மற்றும் தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் ஆகியோரின் மேற்பார்வையில் தச்சநல்லூர் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் வடக்கு புறவழிச் சாலை செண்டர் மீடியன் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் கிழித்து அகற்றப்பட்டது. மேலும் அங்கு மண் தூசி புழுதி என அனைத்தையும் சுத்தம் செய்தல் பணி நடைபெற்றது. மேற்பார்வையாளர்கள் கோவிந்தன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் கணேஷ் முத்துக்குமார் மற்றும் எல்.சி.எப். பணியாளர்கள் ராஜா, சூர்யா ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.