தேவூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தேவூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

தேவூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சேலம்

தேவூர்:

தேவூர் அருகே கோனேரிபட்டி ஊராட்சி வெள்ளாளபாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 25 சென்ட் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்ககிரி தாசில்தார் பானுமதி உத்தரவின்பேரில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், தலைமையில் கோனேரிபட்டி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன், கிராம உதவியாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வெள்ளாளபாளையம் பகுதிக்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.


Next Story