சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்


சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
x

சாணார்பட்டி அருகே, சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே செங்குறிச்சியில் இருந்து குப்பாயூர் செல்லும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில், பள்ளங்களை தோண்டியும், கல்தூண்களை நட்டும் சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதுதொடர்பாக குப்பாயூரை சேர்ந்த மனோகர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், கிழக்கு தாசில்தார் சந்தனமேரிகீதா ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் அவர்களது முன்னிலையில், சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும் சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா, அருள்கலாவதி, செங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story