சாலையோர புதர்கள் வெட்டி அகற்றம்


சாலையோர புதர்கள் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர புதர்கள் வெட்டி அகற்றப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்வதற்காக தார் சாலைகள் மற்றும் கான்கிரீட் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கோத்தகிரி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக, சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. இதனால் தெரு நாய்கள், காட்டெருமைகள் மற்றும் காட்டுப்பன்றிகளின் புகலிடமாக மாறியது. இதையடுத்து கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின் பேரில், பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலையோர புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வனவிலங்குகள் அச்சமின்றி நடந்து செல்ல முடியும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்து உள்ளனர்.


Next Story