சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள சுதாகர் நகர் மெயின்ரோடு பகுதியில் அங்குள்ள வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அப்பகுதி சுருங்கியது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இவ்வழியாக செல்லும் வடிகால் வாய்க்காலிலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு தண்ணீர் செல்ல வழியின்றி அடைக்கப்பட்டு இருந்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வாய்க்கால்களை துார்வாரவும், சுதாகர் நகர் மெயின்ரோட்டில் நிலவும் போக்குவரத்து பிரச்சினையை சரிசெய்யவும் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகரமைப்பு அலுவலர் சாந்தி, நகரமைப்பு ஆய்வாளர் கோகுலக்கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் சுதாகர் நகர் மெயின்ரோடு பகுதியில் இருபுற ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். இதையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் தாலுகா போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




Next Story