சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் அகற்றம்


சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் அகற்றம்
x

சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியிலிருந்து அரசடிப்பட்டி நான்கு ரோடு வழியாக புதுக்கோட்டைக்கு செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் சாலை ஓரங்களில் பலன் தரும் வ கையிலும், நிழல் தரும் வகையிலும் உள்ள மரங்கள் விரிவாக்க பணி காரணமாக நெடுஞ்சாலை துறையினரால் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மணிபள்ளத்தில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல் வேரோடு மரங்களை அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்து பராமரிக்க வழிவகை செய்ய வேண்டும். ஒரு மரத்தை வெட்டுவது சுலபம். ஆனால் அதை உருவாக்குவது கடினம். அதனால் சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் மரங்களை முழுமையாக ஒருபோதும் வெட்டக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story