அனுமதியின்றி வைத்திருந்த சிலுவை அகற்றம்


அனுமதியின்றி வைத்திருந்த சிலுவை அகற்றம்
x

சேத்தூா் மலைப்பகுதியில் அனுமதி பெறாமல் வைத்திருந்த சிலுவையை அதிகாரிகள் அகற்றினர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சேத்தூா் மலைப்பகுதியில் அனுமதி பெறாமல் வைத்திருந்த சிலுவையை அதிகாரிகள் அகற்றினர்.

அனுமதியின்றி சிலுவை

ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் அருகே உள்ள பாரதிநகரையொட்டி காமாட்சி மலை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஒரு சிலர் அரசின் அனுமதியின்றி மலை உச்சியில் சிலுவைகளை நிறுவி இருந்தனர்.

இதுகுறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பங்கேற்ற மாதாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அனுமதியின்றி மத சின்னங்களை நிறுவுவதால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மத பிரச்சினைகளுக்கு காரணம் ஆகாமல் இருப்பதற்காக சிலுவையை அகற்ற உத்தரவிடப்பட்டது.

அகற்றும் பணி

இந்தநிலையில் நேற்று மாலை ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சிலுவையை அகற்றும் பணி நடந்தது.

இதில் ஒரு சிலுவை மட்டும் தற்போது அகற்றப்பட்டது. மற்றொரு சிலுவை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சிலரின் எதிர்ப்பினால் சிலுவை அகற்றும் பணி இரவு வரை தொடர்ந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story