சேலம் கோட்டை மைதானம் அருகேஅனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகள் அகற்றம்


சேலம் கோட்டை மைதானம் அருகேஅனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகள் அகற்றம்
x

சேலம் கோட்டை மைதானம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

சேலம்

சேலம்,

சேலம் மாநகராட்சி கோட்டை மைதானம் அருகே அனுமதியின்றி கடைகள் கட்ட பந்தல் அமைத்து அதில் பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு சென்றனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கடை வைக்க முயன்றவர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் அனுமதியின்றி கடைகள் வைக்கக்கூடாது என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பந்தல் மற்றும் பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அனுமதியின்றி 7 பேர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகள் வைக்க முயன்றனர். அவர்களிடம் அனுமதியின்றி கடைகள் வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று கூறினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி உள்ளோம் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story