தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும்


தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும்
x

ஆரணி காந்தி மார்க்கெட் பகுதியில் தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி சேம்பர் ஆப் காமர்ஸ் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பக்ருதீன் முகமது அலி, செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் சந்திரசேகர், மாநில துணைத்தலைவர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆரணி பிரதான சாலையான காந்தி மார்க்கெட் ரோட்டில் வண்டிமேடு பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியின் முகப்பில் சென்டர் மீடியன் இல்லை. விழா பண்டிகை காலங்களில் மட்டும் தடுப்பு கம்பிகள் வைத்து சென்டர் மீடியன் போடுவது வழக்கம்.

ஆனால் தொடர்ந்து அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காய்கறி மார்க்கெட் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அப்பகுதியில் போடப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றி சிறு வியாபாரிகளுக்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story