சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டுபுதிதாக அமைக்க வேண்டும்


சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டுபுதிதாக அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த மின்கம்பம்

நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

நாகூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

சாய்ந்து விழும் அபாயம்

சிறிய அளவில் காற்று அடித்தால் கூட மின்கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து மின்கசிவு ஏற்பட்டால் அருகில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதிதாக அமைக்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பம் சாய்ந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story