காலேஜ் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


காலேஜ் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

காலேஜ் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் ரோட்டோரம் மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்து கடைக்காரர்கள் தற்காலிக கட்டிடம் உள்ளிட்டவற்றை கட்டியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் பாய்கிறது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மேற்பார்வையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் காலேஜ் ரோட்டில் அய்யப்பன் கோவிலில் இருந்து சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம் வரை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கடைக்காரர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பலர் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். வருகிற 27-ந் தேதியும் காலேஜ் ரோட்டில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story