அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்


அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகா்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகியவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அண்ணா பஸ் நிலையத்தை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயணிகளுக்கான கழிவறை கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்தநிலையில் தற்போது பஸ் நிலையத்தில் நடைமேடை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக நடைமேடை இடிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் உள்ள பழைய இருக்கைகளும் மாற்றப்பட்டு வருகிறது.


Next Story