சமத்துவபுரம் புதுப்பிக்கும் பணி
ஆலடிக்குமுளை ஊராட்சியில் ரூ.1½ கோடியில் சமத்துவபுரம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் தி.மு.க. ஆட்சியில் கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. நாளடைவில் இந்த சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளும், பொது நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய சமுதாயக் கூடங்கள், பூங்கா, நூலகம் உள்ளிட்ட பொது கட்டிடங்கள் சேதமடைந்தன.
ரூ.1½ கோடி ஒதுக்கீடு
இதுகுறித்து தமிழக அரசுக்கு ெதரிவிக்கப்பட்டதன்பேரில் இந்த சமத்துவபுரத்தை புதுப்பிக்க ரூ.1½ கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதனைத்தொடர்ந்து பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், சமுதாயக்கூடம், பூங்கா ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மற்றும் என்ஜினீயர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிவேல், ஆலடிக்குமுளை ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி ஆகியோர் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story