பூவாலையில் சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம் சீரமைப்பு வி.ஏ.ஓ., உதவியாளருக்கு பாராட்டு


பூவாலையில்    சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம் சீரமைப்பு    வி.ஏ.ஓ., உதவியாளருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூவாலையில் சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைத்த வி.ஏ.ஓ., கிராம உதவியாளரை பொதுமக்கள் பாராட்டினர்.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள பூவாலை மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக ரமேஷ்(வயது 28), உதவியாளராக சங்கர் ஆகியோர் பணி புரிந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து சென்றனர்.

எனவே இந்த கட்டிடத்தை கிராம நிர்வாக அலுவலர் ரமேசும், உதவியாளர் சங்கரும் முடிவு செய்தனர். அதன்படி தங்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தில் இருந்து சிறுதொகையை ஒதுக்கி மாதந்தோறும் சேமித்து கட்டிடத்தை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஓராண்டாக சேமித்த பணத்தில் சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைத்து வர்ணம் பூசி புதிதாக நாற்காலி, மேஜை ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களது செயலை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கிராம உதவியாளர் சங்கர் ஆகியோர் கூறுகையில், அரசு கட்டிடத்தை புதுப்பிப்பது சம்பந்தமாக யாரிடமும் ஒரு ரூபாய் கூட கையேந்தி நிற்கவில்லை. நாம் பணி புரியும் அலுவலகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே சீரமைத்தோம் என்றனர்.


Next Story