சிக்னல் விளக்குகள் பயன்பாட்டுக்கு வருமா?


சிக்னல் விளக்குகள் பயன்பாட்டுக்கு வருமா?
x

திருவாரூர்- தஞ்சை பிரதான சாலையில் சிக்னல் விளக்குகள் பயன்பாட்டுக்கு வருமா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர், ஜூன்.30-

திருவாரூர்- தஞ்சை பிரதான சாலையில் சிக்னல் விளக்குகள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வாகன போக்குவரத்து

திருவாரூர் நகரில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுத்திடவும், போக்குவரத்தை சீரமைத்திடவும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன.தொடக்கத்தில் இந்த சிக்கனல் விளக்குகள் ஒளிர்ந்தன. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது எளிதாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த சிக்னல் கம்பங்கள் போதிய பாரமரிப்பு இன்றி தற்போது பயன்பாடு இன்றி காணப்படுகிறது.

பிரதான சாலை

நகரில் அமைக்கப்பட்டிருந்த பல சிக்னல் கம்பங்கள் காணாமல் போய் விட்டன. தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே சிக்னல் கம்பங்கள் உள்ளன. இந்த கம்பங்களும் பயனற்ற நிலையலில் காட்சி பொருளாக மட்டுமே இருந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். குறிப்பாக தஞ்சை சாலை கல்பாலம் பகுதியில் தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் உள்ளன. இங்கு எப்போதும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும். இதனால் விபத்து அபாயமும் அதிகம். இங்கு உள்ள சிக்னல் விளக்கும் பயன்பாடு இன்றி உள்ளது. இதை ஒளிர செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story