கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது


கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகுதியில் உள்ள மெயின் டேங்கில் சேகரிக்கப்படுறது. பின்னர் இங்கிருந்து ராட்சத குழாய் மூலம் கீழ்வேளூர், திருக்குவளை வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இலுப்பூர் சத்திரம் பகுதியில் உள்ள புதுச்சேரி வாய்க்கால் அருகே ராட்சத பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் உடைப்பு சரிசெய்யப்படாமல் இருந்தது.

தண்ணீர் வீணாகியது

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வாய்க்காலில் சென்றது. மேலும் இரவு நேரத்தில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் கூறினர். குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பெறும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சரிசெய்யப்பட்டது

இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. அதை தொடர்ந்து நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story