புயல் மழையால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மாற்றம்
அரக்கோணத்தில் புயல் மழையால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை
மாண்டஸ் புயல் காரணமாக அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
பலத்த காற்று காரணமாக அரக்கோணம் நகரின் சில பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்களும் நடந்தது. சேதமடைந்த மின் கம்பங்கள், அறுந்து கிடந்த மின் வயர்கள் மாற்றும் பணியிலும் மற்றும் மின் கம்பம் மீது விழுந்திருந்த மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு சரி செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story