ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதியில் ரூ.5,318 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்


ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதியில் ரூ.5,318 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்
x

ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதியில் ரூ.5,318 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் 40-க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் திட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்குகிறது. இதன் மூலம் ஆதிதிராவிடர் மக்களுக்கு அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தும் திட்டங்கள் முழுமையாக பயனளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2016 முதல் 2022 வரையிலான 6 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, திருப்பி அனுப்பப்பட்ட நிதி மற்றும் செலவு செய்யப்பட்ட நிதி ஆகியவற்றின் விவரங்களை மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார்.

அதன்படி, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ.295 கோடி, 2017-18 ஆம் ஆண்டில் ரூ.667 கோடி, 2018-19 ஆம் ஆண்டில் ரூ.553 கோடி, 2019-20 ஆம் ஆண்டில் ரூ.456 கோடி, 2020-21 ஆம் ஆண்டில் ரூ.926 கோடி, 2021-22 ஆம் ஆண்டில் ரூ.2,418 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.75,930 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.70,969 கோடியை திட்டங்களுக்கு பயன்படுத்தியது போக மீதம் ரூ.5,318 கோடி கருவூலத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story