சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் குடியரசு தின விழா
சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் குடியரசு தின விழா கொணடாடப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகை அருகே பாப்பாகோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். செயலர் மகேஸ்வரன், இயக்குனர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அரசு வக்கீல் பரமானந்தம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நாகை அரிமா சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். விழாவில் பள்ளி குழந்தைகளின் அணிவகுப்பு நடந்தது. மேலும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகளுடன் மாணவர்கள் நடனமாடினர். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story