தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா
தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
தேவகோட்டை,
தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் கா.சுந்தரலிங்கம் கொடியேற்றி வைத்தார்.துணைத்தலைவர் ரமேஷ், மேலாளர் ராஜேஷ் கலந்து கொண்டனர். தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் தலைவர் பிர்லா கணேசன் கொடியேற்றி வைத்தார்.துணைத்தலைவர் ராசாத்தி நடராஜன், ஆணையாளர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்ணங்குடி யூனியன் அலுவலகத்தில் தலைவர் சித்தனூர் கார்த்திக் மெய்யப்பன் கொடியேற்றி வைத்தார். துணைத்தலைவர் சந்திரபோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கலந்து கொண்டனர். தேவகோட்டை துணை சூப்பிரண்டு அலுவலகம், நகர் காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் ஆகியவற்றில் துணை சூப்பிரண்டு கணேஷ்குமார் கொடியேற்றி வைத்தார்.தேவகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு நகர தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீராஉசேன் கொடியேற்றி வைத்தார். தியாகிகள் பூங்காவில் ராணுவ வீரர் மணிகண்டன் மனைவி சுதா கொடியேற்றினார். தேவகோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேவகோட்டை கிழக்கு நகர தலைவர் வக்கீல் சஞ்சய் கொடியேற்றி வைத்தார். புளியாளில் பருத்தியூர் சூசைமாணிக்கம் கொடியேற்றி வைத்தார். நாகாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா பால்ராஜ் கொடியேற்றினார், சக்கந்தி ஊராட்சியில் சுமதி முத்துராமலிங்கம் கொடியேற்றினார்.