சோளிங்கரில் குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கொடியேற்றினார்.
சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். மேலும் மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கும், சங்க நிர்வாகிகளும் இனிப்பு வழங்கினார்.
இதேபோல காந்தி சிலை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றி வைத்து, மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதில் காங்கிரஸ் நகர தலைவர் டி.கோபால், ஒன்றிய குழு உறுப்பினர் தகரகுப்பம் முனியம்மாள் பிச்சாண்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.
சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தி, மகாத்மா காந்தி திருவுவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகப் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகர் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.