அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்


அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
x

நெல்லை கோர்ட்டில் குடியரசு தின விழா நடந்தபோது எடுத்த படம். 

நெல்லையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவர் மனோஜ்குமார், நிரந்தர நீதிமன்ற நீதிபதி சபினா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் காமராஜ், பொருளாளர் நெல்வன் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நீதிபதி குமரகுரு கலந்து கொண்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி, விளையாட்டு போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வக்கீல்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த குடியரசு தின விழாவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிசந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர் எழில்ரம்யா, மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், சிறுநீரகவியல் துறை தலைவர் ராமசுப்பிரமணியன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கந்தசாமி மற்றும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், செலிவியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மருத்துவக்கல்லூரி வளாகம், பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை அருங்காட்சியகத்தில் மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் ஒற்றுமை என்ற தலைப்பில் நாடகம், தேசப்பற்று குறித்து கவிதை வாசித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் முத்துமாரி, மகேஸ்வரி, பேச்சியம்மாள், ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன், கவிஞர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் உடற்பயிற்சி கல்வித்துறை செயலாளர் செந்தில்குமார், துணை இயக்குனர் பொன்.சோலைபாண்டியன் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை செய்திருந்தார்.


Next Story