தூத்துக்குடியில்பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்


தூத்துக்குடியில்பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

மீன்வளக்கல்லூரி

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரிமுதல்வர் ப.அகிலன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறந்த பணியாளர்கள், பேராசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். மீன்வள கல்லூரி மாணவிகள் சபீனா பிரிஸா, வி.சாதனா ஆகியோர் குடியரசு தினவிழா குறித்து பேசினர். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை உதவி உடற்கல்வி இயக்குநர் த.நடராஜன் செய்து இருந்தார்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு காமராஜ் மகளிர் கல்லூரி தலைவர், வக்கீல் வி. நீலவேணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். கல்லூரி முதல்வர் வான்மதி, செயலாளர் சோமு ஆகியோர் பேசினர். மாணவி ஷர்மிளா வரவேற்று பேசினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி திவ்யதர்ஷினி நன்றி கூறினார். மாணவி ஜெயந்தி நிகழ்ச்சியை தொகுத்து. வழங்கினார்.

சக்தி வித்யாலயா பள்ளி

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, பள்ளி தாளாளரும், முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமையில், அரிமா வட்டார தலைவர் பாலசங்கரி தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் லயன்ஸ்கிளப் செயலாளர் மனோன்மணி, பொருளாளர் அபிநயா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

லசால் பள்ளி

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஆரோக்கியதாஸ், உதவித் தலைமையாசிரியர் பெப்பின், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஹெமில்ட்டன் மெல், உதவி அலுவலர் வெற்றிச் செல்வன், ஆசிரியர்கள் அந்தோணி செல்வன், ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜாய் ப்ரியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி, அன்னை தெரசா கிராம பொதுநல சங்க செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், உதவி செயலர் முருகேசபாண்டி, சென்னைவாழ் நாடார் உறவின் முறை சங்க தலைவர் மனோகரன், செயலர் சின்னக்குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜதுரை நன்றி கூறினார்.

தூத்துக்குடி தூய பேட்ரிக்ஸ் நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு தலைமை ஆசிரியர் தங்கராஜன் டக்ளஸ் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் சம்பத் சாமுவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. டுடிவில் ஆசிரியை தமிழ்செல்வி நன்றி கூறினார்.


Next Story