இந்திய குடியரசு கட்சி பொதுக்குழு கூட்டம்
ஆற்காட்டில் இந்திய குடியரசு கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் ராஜா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் பொன்னம்பலம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணசேகரன், மாநில பொருளாளர் சத்தியசீலன், தேசிய துணை செயலாளர் மேச்சேரியார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு என வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையினை வீடு கட்டாதவர்கள் திரும்பத்தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வசதி உள்ளவர்கள் வீடு கட்டியுள்ளனர், வசதி இல்லாதவர்கள் கட்ட இயலவில்லை. அதனால் அந்த மனையினை திரும்பத் தர வேண்டும் என்பது சரியானது அல்ல. வருகிற 29-ந் தேதி ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை மாபெரும் பேரணி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் கங்காதரன் நன்றி கூறினார்.