மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் கட்டி தர வேண்டும்


மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் கட்டி தர வேண்டும்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு தாலுகாவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் கட்டி தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

ஒவ்வொரு தாலுகாவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் கட்டி தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் தினம்

சிங்கம்புணரியில் உள்ள பாரி வள்ளல் நாடு மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மற்றும் சிவகங்கை தாய் தவழும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நடைபெற்ற விழாவிற்கு பாரி வள்ளல் நாடு மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க தலைவர் சின்னையா தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் முத்துச்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை தாய் தவழும் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் புஷ்பராஜ் கலந்துகொண்டு பேசினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.ஆயிரத்தில் இருந்து 1500 ரூபாயாக உதவித்தொகையை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு அரசு வேலை அனைவருக்கும் வழங்க முடியாது. எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் படித்த, திறமையான 10 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

குடியிருப்புகள்

வீடு இல்லாதவர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும். ஓ.ஏ.பி. மூலம் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வீடு இல்லாத ஏழை எளியவருக்கு வீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிைவேற்றப்பட்ட தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காந்திமதி நகை மாளிகை உரிமையாளர் சிவக்குமார் ரெங்கநாதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நினைவு பரிசுகளும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. விழாவில் சமூக ஆர்வலர்கள், கட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story