தேவகோட்டை-கண்டதேவி ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்-ஊராட்சி மன்ற தலைவி சுந்தரவள்ளி முருகன் கோரிக்கை
தேவகோட்டை-கண்டதேவி ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவி சுந்தரவள்ளி முருகன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
தேவகோட்டை,
தேவகோட்டை-கண்டதேவி ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவி சுந்தரவள்ளி முருகன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
கண்டதேவி ஊராட்சி
தேவகோட்டை யூனியனுக்குட்பட்டது கண்டதேவி ஊராட்சியில் மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரவள்ளிமுருகன். இவரது கணவர் முருகன். ஏற்கனவே கடந்த 2011-16-ம் ஆண்டு வரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளார். தற்போது இவரும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்ட பணிகளை செய்து வருகிறார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவி சுந்தரவள்ளிமுருகன் கூறியதாவது:-
கண்டதேவி ஊராட்சிக்கு உட்பட்ட ராமசாமி வீடு முதல் சொர்ணம் ஆசாரி வீடு வரை சுமார் ரூ.4½ லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை, 14-வது நிதியின் கீழ் ரூ.15½ லட்சத்தில் குட்டி பிரபா வீடு முதல் மன்னன்வயல் சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தார்ச்சாலை
14-வது நிதியின் கீழ் ரூ.5½ லட்சத்தில் கண்டதேவியில் இருந்து செட்டியாவயல் ரோடு, கந்தன் காத்தான் கண்மாய் வரை சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. தே பிரித்தே மேல்நிலைப்பள்ளி பின்புறம் முதல் சீகூரணி, மாலையிட்டான்வயல் வழியாக ஆறாவயல் வரையிலும், கண்டதேவி முதல் பரியன்வயல் வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.3½ கோடியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய 14-வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சத்தில் பாண்டியன் சேர்வை வீடு அருகில் இருந்து வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் நிழற்குடை
மேலும் ரூ.3 லட்சத்தில் குப்பை கிடங்கு சீரமைக்கப்பட்டுள்ளது. இலக்கினிவயல் கிராமத்தில் ரூ.4½ லட்சம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை, ஊராட்சி நிதியின் கீழ் ரூ.1 லட்சத்தில் பரியன்வயல் கிராமத்தில் உள்ள ஊருணியில் படித்துறை கட்டப்பட்டுள்ளது. மராமத்து பணி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிக்குட்பட்ட ஊருணிகள் தூர்வாரப்பட்டுள்ளது.
மேல குடியிருப்பு பகுதியில் ரூ.6.50 லட்சத்தில் குடிதண்ணீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட உள்ளது. ரூ.4.80 லட்சத்தில் சிறுமருதூரில் புதிய பயணியர் நிழற்குடை, தாணிச்சாவூரணி பிள்ளையார்கோவில் முதல் மாரியம்மன் கோவில் வரை ரூ.12½ லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வாழ்கிற மாணிக்கம் பகுதியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி, சுகாதார வளாகமும், அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்தில் பனிப்புலான்வயலில் நெல்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.7.50 லட்சத்தில் முள்ளிக்குண்டு மெயின் சாலையில் இருந்து மாதா கோவில் வரை தார்ச்சாலையும்,. ரூ.12 லட்சத்தில் முள்ளிக்குண்டு பள்ளிக்கூடம் சுற்றுச்சுவரும், ரூ.8 லட்சத்தில் தாணிச்சாவூரணி பள்ளிக்கூடத்தில் சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. .ரூ.12 லட்சத்தில் முள்ளிக்குண்டு தில்லை நகர் சிமெண்ட் சாலையும், அந்த பகுதி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான தனி ரேஷன்கடையும் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் கண்டதேவி மன்னன்வயல் சாலை முதல் தேவேந்திரர் குடியிருப்பு வரை பேவர்பிளாக் சாலையும், ரூ.7 லட்சத்தில் கீழச்செம்பொன்மாரி கீழக்குடியிருப்பு பகுதியில் வடிகாலும், கண்டதேவி ஊருணியை ரூ.3லட்சத்தில் தூர்வாரும் பணியும் நடைபெற உள்ளது. ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தாழையூர் நடு ஊருணியில் படித்துறை கட்டப்பட உள்ளது. ரூ.7.20லட்சம் மதிப்பீட்டில் கண்டதேவி காலனியில் பேவர்பிளாக் சாலையும், தாணிச்சாவூரணி பகுதியில் ரூ.3.60 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையும் அமைக்கப்பட உள்ளது. தேவகோட்டை நகராட்சியுடன் கண்டதேவி ஊராட்சி ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் வளர்ச்சி அடைந்து வரும் குடியிருப்புகளுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிதியை கொண்டு தான் வளர்ச்சிப் பணிகளை செய்ய முடியும். கண்டதேவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்களுக்கு வசதியாக அடிப்படை கட்டுமானங்களை ஏற்படுத்த ரூ.10 லட்சம் நிதி கலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.