சிங்கம்புணரியில் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் - ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை


சிங்கம்புணரியில் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் - ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சாதாரண ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இப்பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும். ஒன்றியகுழு கூட்டத்திற்கு மின்சாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், கூட்டத்தில் 18 அம்ச கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வேளாண் வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான 18 தீர்மானங்களை அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ, மன்ற பொருளாக வாசித்து ஒன்றியகுழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட்டது.

இதில், ஒன்றிய குழு துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைசெல்வி அன்புசெழியன், ரம்யா செல்வகுமார், உமா சோனமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும், அலுவலக பணியாளர்கள், உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story