கம்பனூர் ஆதிதிராவிடர் காலனியில் புதிய சாலை அமைக்க கோரிக்கை
கம்பனூர் ஆதிதிராவிடர் காலனியில் புதிய சாலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கல்லல் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பனூர் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. மேலும் கழிவுநீரும் சாலையில் தேங்குகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட காரணமாகவும் உள்ளது. எனவே கல்லல் யூனியன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் இந்த பகுதியில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையை சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story