மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மத்திய ஆய்வகத்திற்கு பணியாளர்களை நியமிக்க கோரிக்கை


மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மத்திய ஆய்வகத்திற்கு பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
x

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மத்திய ஆய்வகத்திற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மத்திய ஆய்வகத்திற்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆய்வகம்

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மதுரை மாவட்டத்தில் இருந்தும் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேபோல், உள்நோயாளிகளாகவும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள உள் நோயாளிகளுக்கான பரிசோதனைகள் அனைத்தும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில்தான், மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மத்திய ஆய்வகம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அதிநவீன வசதிகளும் அந்த ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது.

பணியாளர்கள்

இந்தநிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறைக்கு மட்டும் பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. தற்போதுள்ள மருத்துவ மாணவர்கள் அந்த பணியை செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான பணியாளர்களை நிரப்ப வேண்டும் என கூறி, தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் சார்பில், டீன் ரத்தினவேலுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story