யோகா ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க கோரிக்கை


யோகா ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க கோரிக்கை
x

யோகா ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வனிதா வரவேற்றார். மாநில ஆலோசனை தலைவர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்.

கூட்டத்தில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மற்ற மாநிலங்களை போன்று விளையாட்டு துறை, அறநிலையத்துறை, காவல் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் யோகா ஆசிரியர்களை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வருகிற ஜூன் மாதம் 20-ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஜய் சீத்தாராமன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story