தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருத்துவமனை அமைக்க வேண்டுகோள்


தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருத்துவமனை அமைக்க வேண்டுகோள்
x

தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருத்துவமனை அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யூ.) பெரம்பலூர்-அரியலூர் 8-வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் டாக்டர் கருணாகரன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ரெங்கராஜ் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்ட செயலாளர் பி.துரைசாமி, கலையரசி, பொருளாளர் சிற்றம்பலம், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் ஏ.கே.ராஜேந்திரன் உள்பட பலர் பேசினார்கள். மாநில செயலாளர் ஜெயபால் நிறைவுரை ஆற்றினார். மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருத்துவமனை அமைக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தில் வழங்குவதை போல் போனஸ் உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களை நேரடியாக வாரியத்தில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளில் இருந்து நிலுவைத் தொகையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கைத்தறி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.


Next Story