வீடு கட்டும் திட்டத்தில் நிதி அளிக்க கோரிக்கை


வீடு கட்டும் திட்டத்தில் நிதி அளிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jan 2023 8:13 PM GMT (Updated: 2023-01-10T17:16:13+05:30)

வீடு கட்டும் திட்டத்தில் நிதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

வரதராஜன்பேட்டை தென்னூரை சேர்ந்த சூசைமேரி, மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில், அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அடித்தளம் அமைத்தேன். ஆனால் அதற்குண்டான தொகையை பேரூராட்சி நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. இதனால் எனது வீட்டை மேற்கொண்டு கட்ட இயலவில்லை. எனது கணவரும் இறந்து விட்டார். வாழ்வாதாரத்திற்கும் வழியில்லை. எனவே அந்த திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் நிதி அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.


Next Story