சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகோள்


சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகோள்
x

சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட துணை தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில், பச்சைமலை கல்லாறு, சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டையில் விவசாய கல்லூரி அமைக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு மற்றும் கறவை மாட்டுக்கடனை தகுதியுள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தோட்டக்கலை மூலம் வழங்கக்கூடிய மின் இணைப்புகளை இலவச மின்சாரமாக வழங்க வேண்டும். தோட்டக்கலை மூலம் விவசாயிகளுக்கு வெங்காய கொட்டகையை மானியத்துடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வட்டத் தலைவர் சாமிதுரை வரவேற்று பேசினார். முடிவில் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story