பாலாறு - தென்பெண்ணை நதிகள் இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த கோரிக்கை
பாலாறு, ெதன் ெபண்ைண திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர்
பாலாறு, ெதன் ெபண்ைண நதி ைணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவை அன்னை சோனியாகாந்தி பேரவை தலைவர் சம்பங்கி மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், முருகன் ஆகியோர் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்ட தலைநகரை சுற்றி சிறிய, பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே நடக்கிறது. இளைஞர்கள், நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பின்னலாடைத்தொழில், இரும்பு வார்ப்பு தொழில் போன்ற தொழில்களை ஏற்படுத்த வேண்டும், பாலாறு -தென்பெண்ணை நதிகள் இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும், புல்லூரில் தடுப்பணை கட்ட வேண்டும். ஆம்பூரில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.