பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கரூர் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியான 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் மின்கட்டண கணக்கெடுப்பை உறுதி செய்திட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்கிட மாவட்ட நிர்வாகத்தை கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஜெயவேல், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story