அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் வழங்க கோரிக்கை
அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் வழங்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர்
தமிழ்நாடு தூய்மைத்தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் சக்திவேல் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.8,352 மாத ஊதியத்தை அனைத்து பஞ்சாயத்துகளிலும் வழங்க உத்தரவிட வேண்டும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தூய்மைப்பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். மாதந்தோறும் கடைசிவெள்ளிக்கிழமை கலெக்டர் தலைமையில் தூய்மைப்பணியாளருக்கு குறை தீர்க்கும் நாள் நடத்த வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு பணிப்பதிவேட்டை பதிவு செய்து முறையாக பராமரிக்க ேவண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story