பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை


பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
x

அய்யன்கொல்லி அருகே புதர்கள் நிறைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, பாதிரிமூலா, அத்திசால், தட்டாம்பாறை உள்பட பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் கொளப்பள்ளி, பந்தலூர், கூடலூர், எருமாடு, தாளூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மூலைக்கடை பகுதிக்கு வந்துதான் செல்லவேண்டும். இவ்வாறு வந்து செல்லும் பயணிகளும் மாணவ-மாணவிகளும் மூலைக்கடை பயணியர் நிழற்குடையில் பஸ்களுக்காக காத்து கிடக்கின்றனர்.

தற்போது பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் நிழற்குடையில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. மேலும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகிறார்கள். இதனால் அந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.


Next Story