நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை
நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இங்கு வரலாறு, இலக்கியம், கவிதை, கட்டுரை, ஆன்மிகம், அரசியல், சட்டம், சமையல், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
சொந்த கட்டிடம்
இதன் காரணமாக மேற்கண்ட கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் புத்தக பிரியர்கள் தினமும் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை படித்து பயன்பெற்று வருகின்றனர். மேலும், இங்குள்ள புகழ்மிக்க அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நூலகத்திற்கு வந்து ஆன்மிக புத்தகங்களை ஆர்வமுடன் படிக்கின்றனர். இவ்வாறு வாசகர்களிடம் நல்லமதிப்பை பெற்ற இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. திடீரென மழை பெய்யும்போது கட்டிடத்தில் உள்ள விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீணாகி வருகின்றன.
இந்த நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட ஊராட்சியின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.