ெரயில்வே போலீசாரின் விசாரணை எல்லையை மாற்றி அமைக்க கோரிக்கை


ெரயில்வே போலீசாரின் விசாரணை எல்லையை மாற்றி அமைக்க கோரிக்கை
x

விருதுநகர் மாவட்டத்தில் ெரயில்வே போலீசாரின் விசாரணை எல்லையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் ெரயில்வே போலீசாரின் விசாரணை எல்லையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ெரயில்வே போலீசார்

ெரயில் நிலையங்கள், ெரயில் பாதையில் நடைபெறும் விபத்து மற்றும் குற்றவியல் சம்பவங்கள் பற்றி தமிழ்நாடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ெரயில்வே நிலைய பாதுகாப்பு பணியில் மத்திய அரசின் ெரயில்வே பாதுகாப்பு படையினர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக ெரயில்வே போலீஸ் தலைமை ஒரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை வேறு மாவட்டங்களில் உள்ள ெரயில்வே போலீசார் விசாரிக்கும் நிலைமையில் விசாரணை எல்லையை அமைத்துள்ளது.

விசாரணையில் பாதிப்பு

இதனால் ெரயில் பாதைகளில் விபத்து ஏற்படும் போது அல்லது குறிப்பிட்ட ெரயில் நிலையத்தில் ஏதேனும் குற்றவியல் சம்பவம்பற்றி விசாரணை மேற்கொள்ள 100 முதல் 150 கி. மீ. தூரத்தில் இருந்து ெரயில்வே போலீசார் வர வேண்டிய நிலையில் விசாரணை நடைமுறையில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் தென் மாவட்டங்களுக்கான ெரயில் பாதையில் விருதுநகர் கவுசிகமா நதி பாலத்தை தாண்டியவுடன் தூத்துக்குடி போலீசாரிடம் விசாரணை செய்யும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கான ெரயில் பாதையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் தூத்துக்குடியில் இருந்து 120 கி.மீ.தூரம் வந்து ெரயில்வே போலீசார் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வலியுறுத்தல்

எனவே விசாரணை நடைமுறையில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ெரயில் பாதைகளிலும், தென் பகுதியில் உள்ள ெரயில் பாதையிலும் மாவட்ட எல்லைவரை விருதுநகர் ெரயில்வே போலீசாரின் விசாரணை எல்லையாக மாற்றி அமைக்க ெரயில்வே போலீஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story