சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
வெம்பக்கோட்டையில் சூறாவளி காற்றினால் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் சூறாவளி காற்றினால் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூறாவளி காற்று
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சூறாவளி காற்றினால் தொடக்க கல்வி அலுவலகம் முன்பு இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்து ஒரு வாரம் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
கடந்த 7 நாட்களுக்கு முன்பு வெம்பக்கோட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது தொடக்க கல்வி அலுவலகம் முன்பு இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
சாய்ந்த மரம்
பல்வேறு தேவைகளுக்காக தினமும் எண்ணற்ற பேர் கல்வி அலுவலகத்திற்கு வருகின்றனர். இந்தநிலையில் சாய்ந்து விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
எனவே போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.