கடமலைக்குண்டு அருகே விஷத்தன்மை கொண்ட கதம்ப வண்டுகளை அப்புறப்படுத்த கோரிக்கை


கடமலைக்குண்டு அருகே விஷத்தன்மை கொண்ட கதம்ப வண்டுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
x

கடமலைக்குண்டு அருகே விஷத்தன்மை கொண்ட கதம்ப வண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கடமலைக்குண்டுவில், மயிலாடும்பாறை செல்லும் சாலையோரம் ஈஸ்வரன் கோவில் அருகில் ஒரு மரத்தில் கதம்ப வண்டுகள், தேன் கூடு போன்று பெரிய கூடாக கட்டியுள்ளன. கதம்ப வண்டுகள் விஷத்தன்மை கொண்டவை. இந்த வண்டுகள் கொட்டியதில் உயிரிழப்பு கூட நேரிடும். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கடமலைக்குண்டுவில் சாலையோர மரத்தில் இந்த கதம்ப வண்டுகள் கூடு, கட்டி அங்கேயே சுற்றித்திரிகின்றன.

இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கூட்டை யாரேனும் தெரியாமல் உடைத்துவிட்டாலோ அல்லது தானாகவே மரத்தில் இருந்து கூடு விழுந்துவிட்டாலோ பொதுமக்களுக்கு கதம்ப வண்டுகளால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் கதம்ப வண்டுகள் மற்றும் அதன் கூட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே ஆபத்து ஏற்படும் முன்பு கதம்ப வண்டுகளை அப்புறப்படுத்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story