நெசவாளருக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை
நெசவாளருக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், வாரியங்காவலில் ஏ.ஐ.டி.யூ.சி. கை நெசவு தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ராதா, மாநில கைத்தறி நெசவு சம்மேளனம் மணிமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் ராஜா பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக மணி, பொருளாளராக அன்பழகன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். நெசவாளருக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரிய ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும். நேரடியாக பதிவு செய்ய மீண்டும் ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செல்வராசு நன்றி கூறினார்.