மலைக்குறவர் இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை


மலைக்குறவர் இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
x

மலைக்குறவர் இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நொச்சியூர் கிராமத்தில், இந்து மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 38 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்களது பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் சலுகைகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சாதி சான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் இனத்தவருக்கு சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 11 ஆண்டுகளாக போராடி வருகிறோம், இன்று வரை கிடைக்கவில்லை. தங்களின் முன்னோர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லை. இதனால், எங்களால் உயர் கல்வி படிக்க முடியவில்லை. சாதி சான்றிதழ் இல்லாததால் எங்களது பிள்ைளகளின் உயர் கல்வியும் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, நொச்சியூர் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைவாழ் மக்களுக்கு உரிய சாதி சான்றிதழை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story