வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டுகோள்


வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டுகோள்
x

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரத்தின் 5-ம் நாளான நேற்று, தமிழில் பெயர் பலகைகள் வைத்தல் தொடர்பாக வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளுடனான கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மூர்த்தி ஆகியோர் வணிகர் சங்க நிர்வாகிகளிடம், தமிழில் பெயர் பலகைகளை கட்டாயமாக வைப்பதற்கான அரசாணை மற்றும் அளவு பற்றி விளக்கமாக எடுத்து கூறினர். இதில் வணிக சங்க நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


Next Story