பத்திர நகல் விரைவில் வழங்க கோரிக்கை


பத்திர நகல் விரைவில் வழங்க கோரிக்கை
x

பத்திர நகல் விரைவில் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்


பொதுமக்கள் வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அவர்கள் சொத்து பத்திரங்களின் நகல்களை கேட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த வகையில் விருதுநகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களை கொடுத்தால் விண்ணப்பங்களுக்கான கட்டண ரசீது கணினியில் பதிவாகாத நிலையில் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பத்திரநகல் கேட்டு விண்ணப்பிக்கும் போது தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் மறுக்கப்படும் நிலை உள்ளது. கணினியில் இதனை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாத நிலை தொடர்கிறது. எனவே பத்திரப்பதிவுத்துறை உடனடியாக ஆன்லைனில் பத்திரப்பதிவு நகல்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கணினி ஒப்பந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தேவையான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story