கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுகோள்


கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுகோள்
x

கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம், அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. கட்டிட தொழிலாளர்களுக்கு நல வாரியம் வழங்கி வரும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை, ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய அரசு உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்த கட்டிட தொழிலாளர்களுக்கு தாமதமின்றி அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story