பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை


பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
x

பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


சாத்தூர் அமீர்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானோர் தினக்கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இருந்ததால் அகற்றப்பட்டது. இது அகற்றப்பட்ட பிறகு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால் அந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் நிழலுக்கு கூட ஒதுங்கி நிற்க முடியாத நிலை உள்ளது. மழை பெய்தாலும் இதே நிலை தான். எனவே இந்த பகுதி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு புதிய பயணிகள் நிழற்குடையினை இந்த பகுதியில் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story